சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல்

    சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதுக்கோட்டையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 பெண்கள் , தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 107 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் எழிலரசன் கூறினார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட் 12 பேரில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.                                                                                                                                                                                                                           -Er.மாதேஷ்