கைப்பந்து போட்டி : திரூவாரூர், ஈரோடு அணிகள் வெற்றி


        கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், மகளிர் பிரிவில் ஈரோடு அணியும் கோப்பைகளை வென்றன.
கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடந்த இந்த தொடரின் ஆடவர் பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி போட்டியில் திருவாரூர் அணியை எதிர்த்து விழுப்புரம் அணி களமிறங்கியது. இதில் 25-18, 25-19, 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் அணி வெற்றிபெற்றது.
இதேபோல் மகளிர் போட்டியில் ஈரோடு அணியுடன் மதுரை அணி பலப்பரீச்சை நடத்தியது. இந்த போட்டியில் ஈரோடு அணி 25-15, 25-16, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வென்றது. இந்த தொடரில் வென்றதன் மூலம் திருவாரூர் மற்றும் ஈரோடு அணிகள், வரும் 19-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

திருப்பூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை

   திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரம் பகுதியை சேர்ந்தவர் காட்டன் முத்து (வயது 60). இவர் திருப்பூர் மாநகராட்சியின் 22-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். வழக்கம் போல் காட்டன் முத்து நேற்று இரவு தனது வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் காட்டன் முத்துவின் கழுத்தில் ஓங்கி வெட்டினர்.  ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை காட்டன் முத்துவின் மனைவி சுப்புலட்சுமி கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது தான் காட்டன் முத்து படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. `என் கணவரை கொன்று விட்டார்களே' என்று கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர்  காட்டன் முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். அவருக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

காட்டன் முத்து கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். காட்டன் முத்து கொலைக்கான காரணம் தெரியவில்லை. அரசியலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை யாராவது தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

-இணைய செய்தியாளர் - s.குருஜி

குயின் ஈமு நிறுவன மேலாளர்கள் கைது

      ரோட்டில் முதலீட்டாளர்களிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் குயின் ஈமு நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பொதுமேலாளர் கார்த்திகேயன் மற்றும் மண்டல மேலாளர் வினோத் ஆகியோரை பெருந்துறை அருகே போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மூதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 7 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு வருடம் ஒரு முறை 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக பராமரிப்பு தொகை வழங்கவில்லை என கூறி 363 பேர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல்

    சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதுக்கோட்டையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 பெண்கள் , தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 107 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் எழிலரசன் கூறினார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட் 12 பேரில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.                                                                                                                                                                                                                           -Er.மாதேஷ்

சிறுவாணி ஒரு கேடா..??


சிறுவாணி பிரச்சனையில் தாம் தூம் என மக்கள் குதிக்கும் நிலையில் நம் மனசாட்சி " காவிரியையும், நொய்யலயும், காளிங்கராயனையும், பவானி மற்றும் அமராவதியையும் எந்த நிலையில் வைத்துள்ளீர்கள்?? உங்களுக்கு சிறுவாணி ஒரு கேடா" என்று மனசாட்சி காரி துப்புவதை எந்த துணியை கொண்டு துடைப்பது...????

தனிமனிதர்கள் நாம் வெளியூர்க்காரனிடம் இருந்து நீருக்கு போராடும் நாம் உள்ளூர் நீர் ஆதாரங்களை எந்த அளவு பாதுகாக்கிறோம்..?? எத்தனை வீடுகளில் மழைநீர் சேகரிப்பை இப்பவும் செய்கிறோம்?? எத்தனை ஏரி, குளங்களை ரியல்எஸ்டேட் ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளோம்..?? எத்தனை பேர் சாயக்கழிவு பிரச்சனைக்காக மனுவாவது கொடுத்தோம்..?? மணல கொள்ளைக்கு எதிராக ஒரு கடிதமாவது எழுதிநோமா..??

நமது மௌனத்தை பலர் காசாக்கி, சோற்றில் விஷத்தையும், நம் வீடு பெண்களின் கர்ப்பத்தில் ஆசிட்டையும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.சராசரியாக ஒவ்வொரு சாய/தோல் ஆலையும் குறைந்த பட்சம் 10 பேரையாவது மலடாக்குகிறது. அதில்லாமல் அணைத்து வகை உடல் நலகொலாரும் போனஸ்..!

 
நீர் பிரச்சனைகளுக்கு போராடும் தலைவர்கள் பெரும்பாலும் அதை அரசியல் ஆக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில் நீர் ஆதார அக்கறை உள்ளவர்கள் என்றால் வெளி மாநிலங்களிடம் போராடும் அதே அளவு கோபத்தை உள்ளூர் பணபிசாசுகளிடமும் காட்டலாம்..!
  

குடிநீருக்காக திறக்கப்படும் வெறும் 100 கன அடி நீரிலும் இரக்கமே இல்லாமல் சாய விசத்தை கலக்கிறார்கள்.. இப்படியும் சந்ததிக்கு சொத்து சேர்க்க வேண்டுமா...?? இந்த சாய கழிவு புகாரை அளித்தால், அடுத்த நாளே குண்டர்கள் போன் செய்து மிரட்டுகிரார்கலாம்..! ஈரோட்டு பின் காவிரி பாயும் மாவட்டங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.. முக்கியமாக ஈரோடு நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள்..நொய்யல்லால் கோவை, ஈரோடு, திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. காளிங்கராயன் ஈரோட்டை கெடுத்துள்ளது..!மொத்தத்தில் விவசாய பொருட்கள் அனைத்திலும் உர/சாயக்கழிவு/தோல் கெமிகல்/பூச்சிமருந்து விஷம் என முற்றிலும் 
மாசுபட்டுள்ளது. தாய் பாலில் இருந்து பசும்பால் வரை எதையும் விட்டு வைக்கவில்லை...!!

                                                       -இணைய செய்தியாளர் : சசிகுமார்

பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??

பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??
*************************************************
 ப்ளேபாய் எனும் ஆங்கில கவர்ச்சி பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஷெர்லின் சோப்ரா எனும் மாடல் தனது சமூக பணிக்காக(!) பாரத ரத்னா விருது கோரியுள்ளாள். “I deserve Bharath Ratna” என்கிறாள். இந்த பாரத ரத்னா விருது எவ்வாறு வழங்கபடுகிறது யாரெல்லாம் வாங்கினார்கள் என்பதை பார்த்தால் இந்த விருதின் மதிப்பு விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. விருது வாங்கியோர், வழங்கப்பட்ட காலம், அப்போதைய ஆட்சியாளர் என்று தோண்டி துருவி பார்த்தால் என் கருத்தின் உண்மை புரியும்.

நேரு குடும்பத்தில் மட்டும் மூவர் இவ்விருதை பெற்றுள்ளனர். இவர்களின் தியாகங்களையும், திறமைகளையும், தேச நலனுக்கான பங்களிப்பையும் இவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு ஊழல்/சமூக/போர் குற்றசாட்டுகளின் உண்மையை விவரம் தெரிந்தோர் எடுத்துரைத்தால் நலமாக இருக்கும். 

ஆனால் நேதாஜி, பகத்சிங், பெரியார், பாலம் கல்யானசுந்தரனார் இன்னும் கலை, இலக்கியம், விவசாயம், மருத்துவம், தொழில் போன்று பல்வேறு துறைகளில் சாதித்த பலரின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் பொதுவான ஒற்றுமை காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என்பதே. விருதின் மரியாதையை உறுதி செய்ய சில நல்லோர்க்கும் வழங்கபட்டிருப்பினும், தேசியவாதி/சுதந்திர போராளிகள் என்று விருது பெற்றுள்ள சிலரை பார்த்தால் இந்தியன் படத்தில் தாமரை பட்டயம் கேட்ட விஸ்வநாதய்யர் கதாபாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் காங்கிரசின் குடும்ப ஆட்சிக்கு துணை நின்ற விசுவாசிகள். ஒருவேளை மக்களிடம் விருதுகளை திரும்ப பெறுவது குறிப்பான விழிப்புணர்வு ஏற்பட்டால் பலரின் நிலை கேளிக்கூத்தாகிவிடும்.

பாரத ரத்னாவுக்கே இந்த நிலையெனில் பத்ம விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், ராணுவ விருதுகளின் நிலை..????

இவற்றையெல்லாம யோசிக்கும்போது ஷெர்லின் சோப்ராவின் கோரிக்கைக்கு பெரிதாக அதிர்சியடைய தேவையில்லை என்பது உண்மை.
-இணைய செய்தியாளர் - சசிகுமார்

வேப்பெண்ணெய் சேமித்து தரும் 30 ஆயிரம் கோடி.

 தழைச்சத்திற்கு(N) விவசாயிகள் இடும் யூரியாவில் பாதிக்குமேல் வேகமாக வெளியேறியும்/ காற்றில் கலந்தும்/நுன்னியிரிகளால் ரசாயனமாற்றம் செய்யப்பட்டு பயிருக்கு பயன்படாமல் போகிறது. வேப்பெண்ணெய் வேப்பம்புன்னாக்கு கலந்து இடுவதால் இழப்புகள் கட்டுபடுத்தபட்டு 30% வரை சேமிக்கபடுகிறது. அதாவது ஏக்கருக்கு 3 மூட்டை இட வேண்டிய இடத்தில் 2 மூட்டை போதுமானது. அல்லது 3 மூட்டை இடும்போது 4 மூட்டைக்கான விளைச்சல் கிடைக்கிறது..!! மறைமுக பலனாக பல நோய் தாக்குதல்களும் தடுக்கப்படுகிறது.

இடும் முறை : (ஒரு மூட்டைக்கு) 1/2  லிட்வேப்பெண்ணெய் +1/2 கிலோ (தேவைகேற்ப) வேப்பம்புண்ணாக்கு கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும்
உரசாக்குகளை (பிளாஸ்டிக்) விரித்து அதன்மேல் யூரியாவை கொட்டி, பேஸ்டிஐ பிசரி 1/2 மணி நேரம் மூட்டையில் பிடித்து வைக்கலாம்/பயன்படுத்தலாம். யூரியா மட்டும் அல்ல, அமோனியா முதலான தழைச்சத்து உரங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். கடைகளில் கிடைக்கும் யூரியா கோட்டை விட இது சிறப்பாக இருக்கும்.

இந்த முறையால் விவசாயிக்கு கிடைத்த லாபத்தை பார்த்தோம். நாட்க்கு..??!! இந்தியாவின் வருட உர மானிய நிதிச்சுமை 1 லட்சம்  கோடிக்கு மேல். 30% யூரியா சேமிக்கப்பட்டால் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னியசொலவணி அப்படியே மீதி! அதற்குமேல் உள்நாட்டு மானிய நிதிச்சுமை சேமிப்பு !! கிட்டதட்ட 30 ஆயிரம்  கோடி உள்நாட்டு யூரியா தேவை 1.96 டன்னாக குறையும்.

(உர உற்பத்தி ஆலையிலேயே கோட்டிங் செய்யலாம். ஆனால் இன்று வரை செய்யவில்லை)

உள்நாட்டு தேவை              2.8 கோடி டன்        ரூ.8.000 /டன் (ரீ டெயில் விலை)
உள்நாட்டு உளற்பத்தி       2.2 கோடி டன்        ரூ.13.000 /டன் (உற்பத்தி விலை)
இறக்குமதி                             60 லட்சம் டன்       ரூ.23.000 /டன் (இறக்குமதி விலை)

வெளிநாட்டு விவசாயிகள் வேப்பெண்ணெய் நன்கு பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு விவசாயத்தின் ஓர் அங்கம. KVK மூலம் இவை அறிவுறுத்தப்பட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமீபமாக விவசாயத்தில், ஆடு, மாடு வளர்ப்பில் வேப்பெண்ணெய் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், உழவனுக்கும், நிலத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.
                                                          -இணையதள செய்தியாளர் : சசிகுமார்