கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை
கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லாவிடில் allout liquid, goodknight liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம்.
எங்களிடம் உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா? பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால் கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது. அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணிசில மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார்.
இதைத் தமிழ்நாட்டில் எந்த மீடியாக்களும் சிறு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. நாமாவது இதை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் நண்பர்களே.
-பசுமைநாயகன்
அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
அரவணைப்பில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லைதான்.ஆனால், தனது வாழ்க்கையைத் தியாகம் செய்து பிறருக்கு அன்னையாகும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கணவன், குழந்தை, குடும்பம் என்று வாழ்வதையே பெரும்பாலான மகளிர் வாழ்வின் இலக்காய் எண்ணும் உலகில், யார் பெற்ற குழந்தைகளையோ, யார் யாரின் பெற்றோர்களையோ தமது சொந்தமாக பாவித்து அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
காசேதான் கடவுள் என்று நம்பும் உலகில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் என அனைவரின் மனதிலும் எதிர்காலம் என்ற ஒன்று அவர்களுக்கு உண்டு என்று அவர்களை நம்ப வைத்தவர் இந்த கலாராணி.
செல்லும் திசைதெரியாமல் இருந்த இவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் ஒருங்கே அளிக்க கலாராணி விதைத்த விதைதான் 'விதை' என்ற சேவை அமைப்பு.
தனி மனிதராய் பிறருக்கு உதவுவதே பெரும் சுமையாய்க் கருதிடும் இக்காலகட்டத்தில் பலரையும் பராமரிக்க இவர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
கலாராணி போன்றோர்க்கு வாழ்க்கையில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை…ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு தருவதைத் தவிர. ஆரவாரமற்ற சேவையால் சமுதாயம் என்ற சிலையை செதுக்கும் கலாராணி ஒரு சமுதாயச் சிற்பியே.
இலவச கட்டாய கல்விச் சட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவையார்
கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது நமது வரலாறும், பாரம்பரியமும்.
இதற்காகவே, இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா.
கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாய கல்விச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்படி, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரவாணிகள், கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆகியோரின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதற்கான கல்வி செல்வை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தன் குழந்தையை பள்ளியில் சேர்க்க 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை இதுவரை அணுகியும் முறையாக எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் பதிலளிக்கவில்லை என்றும் இதனால் தங்கள் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். அரசின் அறிவிப்பாணைகளை செயல்படுத்த நிர்பந்திக்காத கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய கல்வி அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கானல் நீராகும் கல்விக் கனவுகள்...
அரசின் அறிவிப்பானைகளை செயல்படுத்தாமல் உள்ள பள்ளி நிர்வாகங்களால், ஏழை மாணவர்களின் கல்வி கனவுகள் கானல் நீராக மாறி வருவதாக சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருமாவளவனுடன் சமாதானம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தல் பேசிய ராமதாஸ், சாதியை ஒழிக்க கலப்புத் திருமணங்கள் ஒன்றே வழி என்று தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இத்தகைய பிரசாரங்களை குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
ஈரோடு அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலி
ஈரோடு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சித்தோடு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் சந்திப்பில் பேருந்து மீது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 15 பேர், ஈரோடு மற்றும் பவானியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-பசுமை நாயகன்
கைப்பந்து போட்டி : திரூவாரூர், ஈரோடு அணிகள் வெற்றி
கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில்
ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், மகளிர் பிரிவில் ஈரோடு அணியும்
கோப்பைகளை வென்றன.
கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடந்த இந்த தொடரின் ஆடவர்
பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி
போட்டியில் திருவாரூர் அணியை எதிர்த்து விழுப்புரம் அணி களமிறங்கியது.
இதில் 25-18, 25-19, 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் அணி
வெற்றிபெற்றது.
இதேபோல் மகளிர் போட்டியில் ஈரோடு அணியுடன் மதுரை அணி பலப்பரீச்சை
நடத்தியது. இந்த போட்டியில் ஈரோடு அணி 25-15, 25-16, 25-22 என்ற புள்ளிகள்
கணக்கில் போராடி வென்றது. இந்த தொடரில் வென்றதன் மூலம் திருவாரூர்
மற்றும் ஈரோடு அணிகள், வரும் 19-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்
நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்
திருப்பூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை
திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரம் பகுதியை
சேர்ந்தவர் காட்டன் முத்து (வயது 60). இவர் திருப்பூர் மாநகராட்சியின்
22-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்.
வழக்கம் போல் காட்டன் முத்து நேற்று இரவு தனது வீட்டின் முன்பு கட்டிலில்
தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் காட்டன் முத்துவின் கழுத்தில் ஓங்கி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை காட்டன் முத்துவின் மனைவி சுப்புலட்சுமி கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது தான் காட்டன் முத்து படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. `என் கணவரை கொன்று விட்டார்களே' என்று கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் காட்டன் முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். அவருக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
காட்டன் முத்து கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். காட்டன் முத்து கொலைக்கான காரணம் தெரியவில்லை. அரசியலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை யாராவது தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் காட்டன் முத்துவின் கழுத்தில் ஓங்கி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை காட்டன் முத்துவின் மனைவி சுப்புலட்சுமி கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது தான் காட்டன் முத்து படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. `என் கணவரை கொன்று விட்டார்களே' என்று கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் காட்டன் முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். அவருக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
காட்டன் முத்து கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். காட்டன் முத்து கொலைக்கான காரணம் தெரியவில்லை. அரசியலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை யாராவது தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
குயின் ஈமு நிறுவன மேலாளர்கள் கைது
ஈரோட்டில் முதலீட்டாளர்களிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்
பேரில் குயின் ஈமு நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 2 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பொதுமேலாளர் கார்த்திகேயன் மற்றும்
மண்டல மேலாளர் வினோத் ஆகியோரை பெருந்துறை அருகே போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த குயின் ஈமு பார்ம்ஸ்
என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மூதலீடு
செய்பவர்களுக்கு மாதம் தோறும் 7 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு வருடம் ஒரு முறை
15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் இந்த நிறுவனம்
அறிவித்திருந்தது.
இதனையடுத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக
பராமரிப்பு தொகை வழங்கவில்லை என கூறி 363 பேர் மாவட்ட பொருளாதார
குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
-Er.மாதேஷ்
சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல்
சேலம் மற்றும் ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 17 பேர் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி
வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதுக்கோட்டையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும்
மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57
பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் நல பிரிவில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட
47 பெண்கள் , தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 107 பேரும், வைரஸ்
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர்
எழிலரசன் கூறினார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஒடிசா
மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே
ஸ்டான்லி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட
12 பேரில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். -Er.மாதேஷ்
சிறுவாணி ஒரு கேடா..??
சிறுவாணி பிரச்சனையில் தாம் தூம் என மக்கள் குதிக்கும் நிலையில் நம் மனசாட்சி " காவிரியையும், நொய்யலயும், காளிங்கராயனையும், பவானி மற்றும் அமராவதியையும் எந்த நிலையில் வைத்துள்ளீர்கள்?? உங்களுக்கு சிறுவாணி ஒரு கேடா" என்று மனசாட்சி காரி துப்புவதை எந்த துணியை கொண்டு துடைப்பது...????
தனிமனிதர்கள் நாம் வெளியூர்க்காரனிடம் இருந்து நீருக்கு போராடும் நாம் உள்ளூர் நீர் ஆதாரங்களை எந்த அளவு பாதுகாக்கிறோம்..?? எத்தனை வீடுகளில் மழைநீர் சேகரிப்பை இப்பவும் செய்கிறோம்?? எத்தனை ஏரி, குளங்களை ரியல்எஸ்டேட் ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளோம்..?? எத்தனை பேர் சாயக்கழிவு பிரச்சனைக்காக மனுவாவது கொடுத்தோம்..?? மணல கொள்ளைக்கு எதிராக ஒரு கடிதமாவது எழுதிநோமா..??
நமது மௌனத்தை பலர் காசாக்கி, சோற்றில் விஷத்தையும், நம் வீடு பெண்களின் கர்ப்பத்தில் ஆசிட்டையும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.சராசரியாக ஒவ்வொரு சாய/தோல் ஆலையும் குறைந்த பட்சம் 10 பேரையாவது மலடாக்குகிறது. அதில்லாமல் அணைத்து வகை உடல் நலகொலாரும் போனஸ்..!
தனிமனிதர்கள் நாம் வெளியூர்க்காரனிடம் இருந்து நீருக்கு போராடும் நாம் உள்ளூர் நீர் ஆதாரங்களை எந்த அளவு பாதுகாக்கிறோம்..?? எத்தனை வீடுகளில் மழைநீர் சேகரிப்பை இப்பவும் செய்கிறோம்?? எத்தனை ஏரி, குளங்களை ரியல்எஸ்டேட் ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளோம்..?? எத்தனை பேர் சாயக்கழிவு பிரச்சனைக்காக மனுவாவது கொடுத்தோம்..?? மணல கொள்ளைக்கு எதிராக ஒரு கடிதமாவது எழுதிநோமா..??
நமது மௌனத்தை பலர் காசாக்கி, சோற்றில் விஷத்தையும், நம் வீடு பெண்களின் கர்ப்பத்தில் ஆசிட்டையும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.சராசரியாக ஒவ்வொரு சாய/தோல் ஆலையும் குறைந்த பட்சம் 10 பேரையாவது மலடாக்குகிறது. அதில்லாமல் அணைத்து வகை உடல் நலகொலாரும் போனஸ்..!

நீர் பிரச்சனைகளுக்கு போராடும் தலைவர்கள் பெரும்பாலும் அதை அரசியல் ஆக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில் நீர் ஆதார அக்கறை உள்ளவர்கள் என்றால் வெளி மாநிலங்களிடம் போராடும் அதே அளவு கோபத்தை உள்ளூர் பணபிசாசுகளிடமும் காட்டலாம்..!
குடிநீருக்காக திறக்கப்படும் வெறும் 100 கன அடி நீரிலும் இரக்கமே இல்லாமல் சாய விசத்தை கலக்கிறார்கள்.. இப்படியும் சந்ததிக்கு சொத்து சேர்க்க வேண்டுமா...?? இந்த சாய கழிவு புகாரை அளித்தால், அடுத்த நாளே குண்டர்கள் போன் செய்து மிரட்டுகிரார்கலாம்..! ஈரோட்டு பின் காவிரி பாயும் மாவட்டங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.. முக்கியமாக ஈரோடு நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள்..நொய்யல்லால் கோவை, ஈரோடு, திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. காளிங்கராயன் ஈரோட்டை கெடுத்துள்ளது..!மொத்தத்தில் விவசாய பொருட்கள் அனைத்திலும் உர/சாயக்கழிவு/தோல் கெமிகல்/பூச்சிமருந்து விஷம் என முற்றிலும்
மாசுபட்டுள்ளது. தாய் பாலில் இருந்து பசும்பால் வரை எதையும் விட்டு வைக்கவில்லை...!!
-இணைய செய்தியாளர் : சசிகுமார்
பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??
பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??
****************************** *******************
ப்ளேபாய் எனும் ஆங்கில கவர்ச்சி பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஷெர்லின் சோப்ரா எனும் மாடல் தனது சமூக பணிக்காக(!) பாரத ரத்னா விருது கோரியுள்ளாள். “I deserve Bharath Ratna” என்கிறாள். இந்த பாரத ரத்னா விருது எவ்வாறு வழங்கபடுகிறது யாரெல்லாம் வாங்கினார்கள் என்பதை பார்த்தால் இந்த விருதின் மதிப்பு விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. விருது வாங்கியோர், வழங்கப்பட்ட காலம், அப்போதைய ஆட்சியாளர் என்று தோண்டி துருவி பார்த்தால் என் கருத்தின் உண்மை புரியும்.
நேரு குடும்பத்தில் மட்டும் மூவர் இவ்விருதை பெற்றுள்ளனர். இவர்களின் தியாகங்களையும், திறமைகளையும், தேச நலனுக்கான பங்களிப்பையும் இவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு ஊழல்/சமூக/போர் குற்றசாட்டுகளின் உண்மையை விவரம் தெரிந்தோர் எடுத்துரைத்தால் நலமாக இருக்கும்.
ஆனால் நேதாஜி, பகத்சிங், பெரியார், பாலம் கல்யானசுந்தரனார் இன்னும் கலை, இலக்கியம், விவசாயம், மருத்துவம், தொழில் போன்று பல்வேறு துறைகளில் சாதித்த பலரின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் பொதுவான ஒற்றுமை காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என்பதே. விருதின் மரியாதையை உறுதி செய்ய சில நல்லோர்க்கும் வழங்கபட்டிருப்பினும், தேசியவாதி/சுதந்திர போராளிகள் என்று விருது பெற்றுள்ள சிலரை பார்த்தால் இந்தியன் படத்தில் தாமரை பட்டயம் கேட்ட விஸ்வநாதய்யர் கதாபாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் காங்கிரசின் குடும்ப ஆட்சிக்கு துணை நின்ற விசுவாசிகள். ஒருவேளை மக்களிடம் விருதுகளை திரும்ப பெறுவது குறிப்பான விழிப்புணர்வு ஏற்பட்டால் பலரின் நிலை கேளிக்கூத்தாகிவிடும்.
பாரத ரத்னாவுக்கே இந்த நிலையெனில் பத்ம விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், ராணுவ விருதுகளின் நிலை..????
இவற்றையெல்லாம யோசிக்கும்போது ஷெர்லின் சோப்ராவின் கோரிக்கைக்கு பெரிதாக அதிர்சியடைய தேவையில்லை என்பது உண்மை.
-இணைய செய்தியாளர் - சசிகுமார்
வேப்பெண்ணெய் சேமித்து தரும் 30 ஆயிரம் கோடி.
தழைச்சத்திற்கு(N) விவசாயிகள் இடும் யூரியாவில் பாதிக்குமேல் வேகமாக வெளியேறியும்/ காற்றில் கலந்தும்/நுன்னியிரிகளால் ரசாயனமாற்றம் செய்யப்பட்டு பயிருக்கு பயன்படாமல் போகிறது. வேப்பெண்ணெய் வேப்பம்புன்னாக்கு கலந்து இடுவதால் இழப்புகள் கட்டுபடுத்தபட்டு 30% வரை சேமிக்கபடுகிறது. அதாவது ஏக்கருக்கு 3 மூட்டை இட வேண்டிய இடத்தில் 2 மூட்டை போதுமானது. அல்லது 3 மூட்டை இடும்போது 4 மூட்டைக்கான விளைச்சல் கிடைக்கிறது..!! மறைமுக பலனாக பல நோய் தாக்குதல்களும் தடுக்கப்படுகிறது.
இடும் முறை : (ஒரு மூட்டைக்கு) 1/2 லிட்வேப்பெண்ணெய் +1/2 கிலோ (தேவைகேற்ப) வேப்பம்புண்ணாக்கு கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும்
உரசாக்குகளை (பிளாஸ்டிக்) விரித்து அதன்மேல் யூரியாவை கொட்டி, பேஸ்டிஐ பிசரி 1/2 மணி நேரம் மூட்டையில் பிடித்து வைக்கலாம்/பயன்படுத்தலாம். யூரியா மட்டும் அல்ல, அமோனியா முதலான தழைச்சத்து உரங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். கடைகளில் கிடைக்கும் யூரியா கோட்டை விட இது சிறப்பாக இருக்கும்.
இந்த முறையால் விவசாயிக்கு கிடைத்த லாபத்தை பார்த்தோம். நாட்க்கு..??!! இந்தியாவின் வருட உர மானிய நிதிச்சுமை 1 லட்சம் கோடிக்கு மேல். 30% யூரியா சேமிக்கப்பட்டால் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னியசொலவணி அப்படியே மீதி! அதற்குமேல் உள்நாட்டு மானிய நிதிச்சுமை சேமிப்பு !! கிட்டதட்ட 30 ஆயிரம் கோடி உள்நாட்டு யூரியா தேவை 1.96 டன்னாக குறையும்.
(உர உற்பத்தி ஆலையிலேயே கோட்டிங் செய்யலாம். ஆனால் இன்று வரை செய்யவில்லை)
உள்நாட்டு தேவை 2.8 கோடி டன் ரூ.8.000 /டன் (ரீ டெயில் விலை)
உள்நாட்டு உளற்பத்தி 2.2 கோடி டன் ரூ.13.000 /டன் (உற்பத்தி விலை)
இறக்குமதி 60 லட்சம் டன் ரூ.23.000 /டன் (இறக்குமதி விலை)
வெளிநாட்டு விவசாயிகள் வேப்பெண்ணெய் நன்கு பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு விவசாயத்தின் ஓர் அங்கம. KVK மூலம் இவை அறிவுறுத்தப்பட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமீபமாக விவசாயத்தில், ஆடு, மாடு வளர்ப்பில் வேப்பெண்ணெய் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், உழவனுக்கும், நிலத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.
-இணையதள செய்தியாளர் : சசிகுமார்
மூலிகை பெட் ரால் ராமர் பிள்ளை
''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' ....இத நம்பலாமா ??? நன்றி :விகடன்
இந்திய பால் (கலப்பட) புரட்சி
பச்சை குழந்தை முதல் சாகபோகும் கிழவியின் கடைசி உணவு வரை அத்தியாவசிய உணவு பால்..
சில காலமாக டெல்லி மும்பை போன்ற பெருநகரங்களில் இருந்த பால் கலப்படம் இன்று ஈரோடு வரை மலிந்துவிட்டது. ஈரோடு பெயருக்குத்தான் மாநகராட்சி என்றாலும் எந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்தாலும் அருகிலேயே கிராமம்தான் என்பது தெரியும். ஈரோட்டை ஏன் பெரியதாக சொல்கிறேன் என்றால் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம்,மாவட்டம்,மாநிலம், வெளிநாடு என்று இம்மாவட்டத்தின் பால் பொருட்கள் செல்கின்றன. நேற்று ஈரோட்டில் இருந்து பெங்களூரு சென்ற 5 டன் கலப்பட பாலை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரணமான பால் பண்ணையாளர் ஏற்கனவே கலப்பட குற்றத்திற்கு ஆளானவர்.
பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா..?? விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா (யூரிக் அமிலம்/நாப்தா/அம்மோனியா/ சயனைடு பார்முலேசன்), சோடா உப்பு, சலவை சோப்பு தூள் முதலியவை. இப்போதுள்ள மாடுகளே (ஹைபிரிட் என்று) மரபணு மாற்றப்பட்டு நோய் கூறுகள் உள்ள பாலை கொடுக்கும் நிலையில் இது வேறு.
இன்று பெருநகரங்களில் வரும் பால் பொருட்களில் 70% கலப்பட பால்தான் என்பதை உணவு கலப்பட தணிக்கை துறையே சொல்கிறது. இனி தமிழக மாவட்டங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
சீனாவில் 2008ல் பால் கலப்படத்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட 3 லட்சம் மக்கள் பாதிக்கபட்டனர். பலர் உயிர் இழந்தனர். சீன அரசு குற்றவாளிகளை தூக்கில் போட்டது. இந்தியாவிலும் அத்தனை உயிர்களை காவு சீக்கிரம் காவு கொடுப்போம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் அதிகாரிகள்/மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தால் நலம்.
இணையதள செய்தியாளர் : சசிகுமார்
சோலார் பம்ப்..! கலக்கும் விவசாயி..!!
சோலார் பம்ப்..! கலக்கும் விவசாயி..!!
(ஆலோசனை: +91 96885 32123)
கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.
''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜயகுமாரின் தென்னந்தோப்பு. களத்துமேட்டில், தான் அமைத்திருக்கும் சூரியசக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளை நம்மிடம் காட்டியவர், ''கரன்ட் தட்டுப்பாடை என்னால சமாளிக்க முடியல. அதனாலதான், சோலார் பவர் ஜெனரேட்டர் மூலமா, பம்ப்செட்டை இயக்க ஆரம்பிச்சுட்டேன்.
கோயம்புத்தூர்தான் என்னோட பூர்விகம். போன தலைமுறையில செல்வாக்கான விவசாயக் குடும்பம். ஆனா, நான் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, 40 வருஷமா மெஷினுக்குள்ளயே வாழ்ந்துட்டேன். ஆனாலும், மனசுக்குள்ள விவசாய ஆசை போகல. பொண்ணு, பையன் ரெண்டுபேரும் படிச்சு அமெரிக்காவுல செட்டிலாகி நல்லா சம்பாதிக்கறாங்க. 'இனி மெஷின் வாழ்க்கை போதும்’னு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கணிசமான பணம் கையில இருந்துச்சு. அதை வெச்சு, செழிப்பா இருக்குற இந்தத் தோப்பை வாங்கினேன்.
வருஷம் முச்சூடும் தண்ணீர் தளும்புற கிணறு. இருந்தாலும், சொட்டுநீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். காய்ப்புக்கெல்லாம் குறையில்ல. அதனால என்னோட விவசாய வாழ்க்கை சந்தோஷமாதான் போயிட்டிருந்திச்சு. ஆனா, கரன்ட் பிரச்னை வந்ததுக்கப்பறம் ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. கிணறு நிறைய தண்ணி இருந்தும் ஒழுங்கா பாசனம் பண்ண முடியாம, மரங்கள்லாம் காய ஆரம்பிச்சுச்சு. குரும்பையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.
'என்ன செய்றது’னு தீவிரமா யோசிச்சு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன். 'ஜெனரேட்டர் வாங்கலாம்’னு சிலர் யோசனை சொன்னாங்க. அதைப்பத்தி விசாரிச்சப்போ... 'அது, சாத்தியமே இல்லை. விவசாயத்தைக் காலி பண்ணிடும்’னு தெரிய வந்துச்சு. அதுக்கப்பறம்தான் 'சோலார் பம்ப்செட்’ பத்திக் கேள்விப்பட்டேன்.
உடனே, ஒரு கம்பெனியில விசாரிச்சேன். ஒருத்தரோட தோட்டத்துல சோலார் மூலமா இயங்குற பம்ப்செட்டை நேர்ல போய் பாத்தேன். 500 அடி ஆழ கிணத்துல இருந்து சோலார் மூலம் தண்ணீர் கொட்டுச்சு. அதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே, 5 ஹெச்.பி மோட்டாரை இயக்குற அளவுக்கு அரை சென்ட் நிலத்துல சோலர் பேனல்களை அமைச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் விஜயகுமார்..
சோலார் பம்ப்/ சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த
தகவல்தளம்
-பசுமை நாயகன்
அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில் -சிபிசந்தர்
Subscribe to:
Posts (Atom)
















